Connect with us

இந்தியா

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.. நடந்தது என்ன?

Published

on

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.. நடந்தது என்ன?

Loading

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.. நடந்தது என்ன?

Advertisement

கோவையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி நேற்று மாலை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி, பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடியும், கருப்பு கொடி ஏந்தியபடியும் பங்கேற்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கருப்பு தின பேரணியில், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேரடியாக முதல் 5 நிமிடம் முதல்வர் ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகின்றேன் எனக்கூறி தனது பேச்சைத் தொடங்கியவர், “2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் குண்டு வெடித்தது. NIA அறிக்கையில் அந்த காரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் துணிக்கடையில் வைக்கத் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்காகக் கொண்டு வரப்பட்ட கார் ஈஸ்வரன் கோவில் அருகே வரும் போது ஸ்பீடு பிரேக்கர் அருகில் நின்றது. அதைச் சரி செய்யும் போது வெடித்துள்ளது. இதை சிலிண்டர் வெடி விபத்து என்று தமிழக முதல்வர் சொல்கின்றார்.

Advertisement

2022 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி சத்தியமங்கலம் காட்டில் உமர்பாரூக் என்பவர் தலைமையில் 8 பேர் சேர்கின்றனர். அதில், முபினும் இருக்கின்றார். அந்தக் கூட்டத்தில் உமர்பாரூக் முடிவு பண்ணியபடி ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர். மார்ச் மாதம் 750 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வாங்குகின்றார். முபினின் இரண்டாவது டார்கெட் போலீஸ் கமிஷனர் அலுவலகம். முதல் அட்டாக் துணிக்கடை, இரண்டாவது அட்டாக் கமிஷனர் அலுவலகம்.

முதல் சம்பவம் முடிந்து 6 நாள் கழித்து அதே வண்டியைக் கொண்டு கமிஷனர் அலுவலகம் வெடிக்க வைக்கனும் என்பதுதான் அவர்கள் பிளான். முபின் 7 நிமிடம் வீடியோ ரெக்கார்ட் பண்ணி வைத்து இருக்கான். அந்த வீடியோ விரைவில் வெளிவரும். தீவிரவாதிகள் செய்து வரும் அதன் பெயர் பையத். முபின் அக்டோபர் 19 ம் தேதி பையத் எடுக்கின்றான். காவல் துறை நல்ல வேலை பாக்குறீங்க, வயிறு எரிந்து பேசுகின்றேன், முன்னாள் காவல் துறை என்ற அடிப்படையில் பேசுகின்றேன். இதுவரை இந்த வழக்கில் 18 பேரை NIA கைது செய்து இருக்கின்றனர். கோவைக்கு NIA கொண்டு வர பரிசீலனை செய்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சொல்லி இருக்கிறார்.

சீமான், திருமாவளவன், தனியரசு போன்றவர்கள் ஓட்டு பிச்சைக்காக இருக்கின்றனர். மக்கள் விழிக்க வேண்டும்; மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருக்கனும். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள், அமைதியாக கைதாவோம். நரேந்திர மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன் என பாட்ஷா 2003ல் சொன்னார். ஆனால் மோடி கோவை வந்தார், ரோடு ஷோ நடத்திட்டு போனார்.

Advertisement

கிறிஸ்துமஸ் வந்தாலே உதயநிதிக்கு குதுகலம் வந்துவிடும். நான் ஒரு இந்து என்று சொல்ல மட்டும் உதயநிதிக்கு வாய் வராது. மோடி கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தினார். அதில் இஸ்லாமியர்களும் அடக்கம். எங்களுக்கு இந்தியர், தமிழர் என்பது மட்டுமே அடையாளம்.

தமிழர்களின் மிகப்பெரிய வியாதி மறதி. இது இருக்கும் வரை ஓட்டு பிச்சை எடுப்பவன் வந்து கொண்டே இருப்பான். கோவை காவல்துறை நேர்மையாக இருக்கனும், தயவு செய்து தவறான கட்டளையை யார் சொன்னாலும் அதை ஏற்க மறுங்கள்.

கோவை மக்களின் மனசாட்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காவல் துறை கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். வரும் தேர்தலில் கோவைக்கு 6க்கு 6 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாக வேண்டும். வானதி அக்காவுடன் இன்னும் 5 பேர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்” என்று பேசினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கருப்பு தின பேரணியில் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்கள் செல்ல அனுமதி மறுத்துத் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சிறிதுநேரத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கைதாகினர்.

அதன்பின் சில மணிநேரங்களில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அண்ணாமலை உள்ளிட்டோர் கைதால், கோவையில் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன