Connect with us

இந்தியா

தொடங்கும் பண்டிகை காலம்… உயரும் தங்கம் விலை!

Published

on

Loading

தொடங்கும் பண்டிகை காலம்… உயரும் தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.880 குறைந்த நிலையில் இன்று (டிசம்பர் 21) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 அதிரடியாக உயந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.7,070-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ. 56,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.7,745-க்கும், ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ. 61,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் 5 தினத்தில் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன