Connect with us

பொழுதுபோக்கு

பிளாக்பஸ்டர் புஷ்பா 2 தி ரூல்: உலகளவில் வேகமாக ரூ1500 கோடியை கடந்த இந்திய படம்!

Published

on

Pushpa 1000 cr

Loading

பிளாக்பஸ்டர் புஷ்பா 2 தி ரூல்: உலகளவில் வேகமாக ரூ1500 கோடியை கடந்த இந்திய படம்!

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் வெளியாகி 16-வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. Read In English: Pushpa 2 worldwide box office collection day 16: Allu Arjun’s blockbuster becomes fastest Indian film to break the Rs 1500 crore barrierதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா தி ரைஸ். பான் இந்தியா படமாக வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்த இந்த படம், வசூல் வேட்டை நடத்திய நிலையில், தற்போது படத்தின் 2-ம் பாகம் வெளியாகியுள்ளது. புஷ்பா தி ரூல் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த படத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இயக்குனா சுகுமார் இயக்கிய இந்த படம், இந்தியாவில் ரூ. 1000 கோடியை தாண்டி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரைப்பட வணிக கண்காணிப்பு இணையதளமான சாக்னிக் (Sacnilk) வெளியிட்டுள்ள தகவலின்படி, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ஒரு சிறந்த பிளாக்பஸ்டர் ஆகும். 16 நாட்களில் நிகரமாக ரூ 1004.35 கோடி வசூலித்துள்ளது. இதில் படம் வெளியாகி 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று (டிசம்பர் 20) சுமார் ரூ 13.75 கோடி வசூலித்துள்ளது..படத்தின் ஈர்க்கக்கூடிய நடிப்பு, அதன் வலுவான கதைக்களம் மக்களை திருப்திப்படுத்துவது, கவனம் ஈர்க்கும் கேரக்டர்கள் மற்றும் அல்லு அர்ஜுனின் செஞ்சந்தன கடத்தல்காரரான புஷ்பா ராஜின் நடிப்பு உள்ளிட்ட காரணங்களால் படம் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில, புஷ்பா 2: தி ரூல் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படம், வெளியான 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூலித்துள்ளது.ஹிந்தி மார்க்கெட்டில், புஷ்பா 2 திரைப்படம், 15 நாட்களில் 632.50 கோடி ரூபாய் வசூல் செய்து, ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் ஸ்ட்ரீ 2, ஷாருக்கானின் ஜவான் மற்றும் பிரபாஸின் பாகுபலி 2 அகிய படங்களை வீழ்த்தி வசூல் சாதனையை முறியடித்துள்ளது. முதல் வார வசூல் நிகரமாக ரூ. 725.8 கோடி மற்றும் இரண்டாவது வார வசூல் ரூ 264.8 கோடி. இரண்டு வாரங்களுக்கு இடையே எண்ணிக்கையில் 63.52% குறைந்தாலும், நிகரமாக இந்தியாவில் புஷ்பா 2: தி ரூல் படம் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டிய ஒரே படம் எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி 2: தி கன்க்ளூஷன் படம் தான்.புஷ்பா தி ரூப் படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ், படம் திரையரங்குகளில் வெளியாகி 56 நாட்கள் வரை ஒடிடி தளங்களில் வெளியிடப்படாது என்று அறிவித்துள்ளதால், விடுமுறை நாட்களில் ரசிகர்கள் பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம். புஷ்பா 2 படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த படத்தின் பிரீமியரில் ரசிகரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீன் பெற்றார். இந்த பின்னடைவு இருந்தாலும், படம் தொடர்ந்து வெற்றி பெற்று, திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.A post shared by Mythri Movie Makers (@mythriofficial)தற்போது 2 புதிய படங்கள் களத்தில் இறங்கியுள்ளதால், புஷ்பா 2 தி ரூல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆதிக்கம் ஒரு சவாலை எதிர்கொள்ள உள்ளது. முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் விடுமுறை நாட்களில் குடும்பங்களின் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்தி பதிப்பு ஷாருக்கான் மற்றும் அவரது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் அப்ராம் கான் ஆகியோர் இந்த படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்கூடுதலாக, வருண் தவானின் பேபி ஜான், அட்லீயின் தயாரிப்பில், டிசம்பர் 25 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இது புஷ்பா 2: தி ரூல்  படத்தில் வசூல் சாதனைக்கு மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இரண்டு படங்களுக்கிடையேயான போட்டி ஏற்கனவே சூடுபிடித்துள்ளது, அவற்றின் விநியோகஸ்தர்களிடையே தியேட்டர் பகிர்வு சர்ச்சை உருவாக்கியுள்ளது. விடுமுறை காலம் தொடங்கும் வேளையில், இந்தப் புதிய போட்டியாளர்களுக்கு எதிராக புஷ்பா 2: தி ரூல் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன