இந்தியா
புதுச்சேரி பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ மனு

புதுச்சேரி பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ மனு
புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வரக் கோரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு வியாழக்கிழமை பேரவைச் செயலரிடம் மனு அளித்தார்.இந்த நிலையில், பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளனும், பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளார்.அங்காளன் அளித்துள்ள கடிதத்தில், “புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தனது பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். சட்டப்பேரவையில் உறுதிமொழி குழுத் தலைவரின் பதவியை நீக்கியதன் மூலம் அவர் பாரபட்சமாக செயல்பட்டது உறுதியானது. தற்போதைய பேரவைத் தலைவரின் நிலைப்பாடு அரசமைப்பு மீறல்களால் நிரம்பி உள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“