இந்தியா
வைகை எக்ஸ்பிரஸ் இனி மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. மதுரை ரயில்வே அறிவிப்பு…!!

வைகை எக்ஸ்பிரஸ் இனி மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. மதுரை ரயில்வே அறிவிப்பு…!!
வைகை எக்ஸ்பிரஸ்
மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் (12636) நாள்தோறும் 7.20 மணிநேரப் பயணமாக, காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். தொடர்ந்து, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு (12635) பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும். தென்மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தைப்பூசம், இருமுடி விழாவை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, மேல்மருவத்தூரிலும் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூரிலும் தற்காலிகமாக வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே துறை சார்பில் அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636), இன்று முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் மதியம் 12.23 – 12.25 மணி வரை 2 நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மேல்மருவத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அனைவருமே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.