Connect with us

இந்தியா

Local Body Election in Tamilnadu : உள்ளாட்சித் தேர்தல் எப்போது? – தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்

Published

on

Local Body Election in Tamilnadu : உள்ளாட்சித் தேர்தல் எப்போது? - தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்

Loading

Local Body Election in Tamilnadu : உள்ளாட்சித் தேர்தல் எப்போது? – தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்

Advertisement

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக் கோரி முனியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆகியோர் வார்டு மறு வரையறை, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என உத்தரவாதம் அளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன