இந்தியா
டாப் 10 நியூஸ் : திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல் தேசிய கணித தினம் வரை!

டாப் 10 நியூஸ் : திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல் தேசிய கணித தினம் வரை!
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 22) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
குவைத் நாட்டிற்கு 2 நாள் பயணமாக நேற்று சென்ற பிரதமர் மோடி, இன்று காலை பாயன் அரண்மனையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து குவைத் நாட்டின் அமிரை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு இளவரசரை சந்திக்கிறார்.
பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கணித மேதையான சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளான இன்று தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.23க்கும், டீசல் ரூ.92.81க்கும் விற்பனையாகி வருகிறது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துளளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதல்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் – இந்திய மகளிர் அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போடி வதோதராவில் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் 4வது சிங்கிளான ‘தொப் {Dhop}’ பாடல் இன்று காலை 8.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.