இந்தியா
மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கிய மன்னர்

மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கிய மன்னர்
PM Modi Kuwait Visit, PM Modi receives Mubarak Al Kabeer: ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ என்பது குவைத் நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இறையாண்மை மிக்க தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படும் குவைத் உயரிய விருது ஆகும்.ஆங்கிலத்தில் படிக்க: PM Modi awarded Kuwait’s highest honour, the Order of Mubarak Al Kabeerபிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். மோடிக்கு வழங்கப்படும் 20-வது சர்வதேச கவுரவம் இது.குவைத் நாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி தனது 2 நாள் குவைத் பயணமாக, இந்திய தொழிலாளர் முகாமுக்கு சனிக்கிழமை வருகை தந்தார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவால் அழைக்கப்பட்ட பிரதமர் மோடி, மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் சபா அல்-கலித் அல்-சபா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது, இதற்கு முன்னர், பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.