இந்தியா
DHS Recruitment: 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை… ரூ.60,000 வரை சம்பளம்… டிச.31 தான் லாஸ்ட்…

DHS Recruitment: 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை… ரூ.60,000 வரை சம்பளம்… டிச.31 தான் லாஸ்ட்…
8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை… ரூ.60,000 வரை சம்பளம்… டிச.31 தான் லாஸ்ட்…
தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவப் பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முற்றிலும் தற்காலிகமாக 11 மாதக் கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DEO, Driver, Nurse, Medical Officer மற்றும் பல்வேறு பணிகளில் உள்ள 69 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / B.Sc / BDS / D.Pharm / Diploma / ITI / M.Sc / MA / MBBS / MD என பணிக்குத் தேவையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பணியின் அடிப்படையில் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற அதிகாரப்பூர்வத் தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.