தொழில்நுட்பம்
உங்க ஆதார் அட்டை மிஸ்யூஸ் செய்யப்படுகிறதா? கண்டறிந்து பாதுகாப்பது எப்படி?

உங்க ஆதார் அட்டை மிஸ்யூஸ் செய்யப்படுகிறதா? கண்டறிந்து பாதுகாப்பது எப்படி?
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் அத்தியாவசியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும், இது பல்வேறு நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் அரசாங்க திட்டங்களைப் பெறுவது வரை முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில் தனிநபர் பற்றி விவரங்கள் பெயர், தனித்துவ அடையாள எண், போட்டோ, வீட்டு முகவரி உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் சமீப காலமாக ஆதார் அட்டை வைத்து ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுகிறது. உங்கள் ஆதார் அட்டை வேறு நபர்களால் பயன்படுத்தப்படுகிறாரா என்பதை கண்டறிந்து பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.