இலங்கை
சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொரி!

சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொரி!
வீதியோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லொறி ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் புனேவின் வாகோலியில் இன்று அதிகாலை 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் அமராவதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் புனேவுக்கு வந்திருந்தனர் என்றும் சம்பவம் நடந்த நேரத்தில் லொறி சாரதி மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. (ச)