இந்தியா
பட்டாவில் மாற்றம் செய்ய வேண்டுமா ? இனி தாலுகா ஆபிஸ் போக தேவையில்லை..!!

பட்டாவில் மாற்றம் செய்ய வேண்டுமா ? இனி தாலுகா ஆபிஸ் போக தேவையில்லை..!!
பட்டாக்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த 4.3.24 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு துறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய தாலுகாவில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
அதன் அடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கைமேற்கொள் ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்ட்டல் வாயிலாகபெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையத ளம் மற்றும் தமிழ்நிலம் செயலி மூலம் நிலஅளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.