Connect with us

வணிகம்

ரூ.7000 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்.. ஒரே ஆளாக கட்டி ஆளும் கோடீஸ்வரரின் மகள்… யார் இவர் தெரியுமா?

Published

on

ரூ.7000 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்.. ஒரே ஆளாக கட்டி ஆளும் கோடீஸ்வரரின் மகள்... யார் இவர் தெரியுமா?

Loading

ரூ.7000 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்.. ஒரே ஆளாக கட்டி ஆளும் கோடீஸ்வரரின் மகள்… யார் இவர் தெரியுமா?

பல இந்திய கோடீஸ்வரர்கள் தாங்கள் பாடுபட்டு உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தை வழிநடத்த வெளிநபர்களை காட்டிலும் தங்கள் வாரிசுகளிடம் ஒப்படைக்கவே பெரிதும் விரும்புகின்றனர். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவர்களும் தங்களது குடும்ப வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு, அதைத் தொடர்ந்து அடுத்தகட்டத்திற்கு வளர்ச்சியடைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜெயந்தி சவுகான். பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளரான ரமேஷ் சவுகானின் மகள் தான் இவர்.

Advertisement

ஜெயந்தி தற்போது இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக வணிகத்தை வழிநடத்தி வருகிறார். அவர் தன்னுடைய 24 வயதிலிருந்தே பிஸ்லேரி (Bisleri) நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். பிஸ்லேரியின் ரூ.7,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு ஜெயந்தி ஆவார். தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பணிபுரிந்து வந்த இவர், நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயந்தியின் தலைமையின் கீழ் பிஸ்லேரி பல மாற்றங்களை கண்டது. இதன் தயாரிப்பு மேம்பாட்டிற்கு அப்பால், பிஸ்லேரியின் பிராண்ட் இமேஜைப் புதுப்பிப்பதிலும் ஜெயந்தி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

பிஸ்லேரியில் அவரது பதவிக் காலத்தைப் பற்றி கூற வேண்டுமென்றால், நிறுவனத்தின் தரைத் தளத்தில் பெற்ற அனுபவத்தில் தொடங்கி, நிறுவனத்தினுடைய அண்றாட செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு இருந்தது. ஜெயந்தி உலகில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர். அதோடு ஒரு தீவிர விலங்கு பிரியரும் கூட. பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞராகவும் இருக்கும் அவர், தனது அனுபவங்களின் சாரத்தை அவ்வப்போது படம்பிடித்து காட்சிப்படுத்துகிறார்.

நிறுவனத்தில் இருந்த இத்தனை ஆண்டுகளில், பிராண்டுகளை உருவாக்குதல், புதிய தயாரிப்பு மேம்பாடு, வணிகத்தை இயக்கும் நுணுக்கமான நுணுக்கங்களைப் பற்றிய அறிவைப் பெற தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட்தோடு அதில் முக்கிய பங்கு வகிப்பதன் மூலம், இந்த தொழில் தனக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.

Advertisement

ஜெயந்தி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கின் (FIDM) முன்னாள் மாணவர் ஆவார். அவர் தனது படிப்பில் தயாரிப்பு மேம்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்தினார். ஜெயந்தி மிலானோவில் உள்ள புகழ்பெற்ற இஸ்திடுடோ மரங்கோனியில் ஃபேஷன் ஸ்டைலிங்கைப் படித்தார். மேலும் அவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் (SOAS) பட்டம் பெற்றுள்ளார். இதுதவிர, அவர் லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷனில் இருந்து ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிலும் தகுதிகளைப் பெற்றுள்ளார். இது அவரது தொழில்முறை திறமைகளை மேலும் மேம்படுத்துவதாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன