Connect with us

இந்தியா

எம்.ஜி. ஆர் அமைச்சராக்க ஆசைப்பட்ட அந்த 12 இளைஞர்கள் யார்? – சைதை துரைசாமி சொல்லும் ரகசியம்!

Published

on

Loading

எம்.ஜி. ஆர் அமைச்சராக்க ஆசைப்பட்ட அந்த 12 இளைஞர்கள் யார்? – சைதை துரைசாமி சொல்லும் ரகசியம்!

அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அதிமுக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் கருப்பு உடையில் சென்று அஞ்சலி இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

அதே போன்று எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியும் தனது ஆதரவாளர்களுடன் நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவர் ‘எங்களின் அவதார புருஷருக்கு, புரட்சி தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி கடிதம்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை, ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகம் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

Advertisement

குறிப்பாக 1984ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, கட்சியில் 12 இளைஞர்களை அமைச்சர்களாக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதில், “அ.தி.மு.க-வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு 1984-ல் இளைஞர்கள் 12 பேரை அமைச்சர்களாக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டாய்.

’செங்கோட்டையன், செம்மலை, முனிரத்னம், நாட்றாம்பள்ளி அன்பழகன், எ.வ.வேலு, கே.பி.ராமலிங்கம், தொண்டாமுத்தூர் சின்னராஜூ, வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் எனக்கும் முக்கிய இடம் கொடுத்திருந்தாய்.

Advertisement

அந்த சீர்திருத்தம் மட்டும் நிறைவேறியிருந்தால் ஆட்சியிலும், கட்சியிலும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கும். அது நடக்காமல் போனதை நினைத்து வருந்துகிறேன் தலைவா” என குறிப்பிட்டுள்ளார் சைதை துரைசாமி.

1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி 190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன