Connect with us

பொழுதுபோக்கு

மௌனராகம் நடிகையுடன் ஈரமான ரோஜாவே ஹீரோ: முக்கோண காதல் கதையா இருக்குமோ!

Published

on

Vijay TV Sn

Loading

மௌனராகம் நடிகையுடன் ஈரமான ரோஜாவே ஹீரோ: முக்கோண காதல் கதையா இருக்குமோ!

மௌனராகம் சீரியல் மூலம் வரவேற்பை பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சில், பங்கேற்ற, நடிகை ரவீனா, புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ள நிலையில், இந்த சீரியலில், ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் திராவியம் நாயகனாக நடித்துள்ளார்.சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், சீரியல், மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஜய் டிவியில் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவது வழக்கம். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக பழைய சீரியல்கள் விறுவிறுப்பை ஏற்படுத்தவும், புதிய சீரியல்கள், ஒளிபரப்பை தொடங்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சிந்து பைரவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில், ஈரமான ரோஜாவே சீசன் 1 மற்றும் 2-ல் நாயகனாக நடித்த திரவியம் மற்றும் மௌனராகம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரவீனா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனம் ஈர்த்து வருகிறது.ஈரமான ரோஜாவே சீசன் 2-க்கு பிறகு வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடித்து வரும் திரவியம், தற்போது இந்த சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இதன் ப்ரமோவில், தியேட்டருக்கு தனது தோழியுடன் படம் பார்க்க ரவீனா வருகிறார். அப்போது அவரின் தோழி, திராவியத்தை பார்த்து, சினிமாவுக்கு டிக்கெட் எடுத்து கொடுக்க, அவர் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் அவரின் நண்பன், கூட்டமாக இருக்கும்போது டிக்கெட் வேண்டாம்னு சொல்லாத என்று சொல்லி டிக்கெட்டை வாங்கிக்கொள்கிறான்.அதன்பிறகு திராவியம், தியேட்டரில் படம் பார்க்க, ரவீனாவின் தோழி அவரது அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அதேபோல், திரவியத்தின் நண்பன், ரவீனாவின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். ஏட்டிக்கு போட்டியான இந்த ஜோடி பற்றிய கதை தான் இது என்று ப்ரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ தற்போது கவனம் ஈர்த்து வரும் நிலையில், வழக்கமான காதல் கதைதானே என்ற விமாசனமும் எழுந்துள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன