இலங்கை
யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்

யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
சம்பவத்தில் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே உயிரிழந்தார்.
நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு நேற்று ( 23) வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தார்.
.
இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்ததை அடுத்து , யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது