Connect with us

இலங்கை

ரோமானிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

Published

on

Loading

ரோமானிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

இலங்கையின் ரோமானிய தூதுவர் Steluta Arhire  தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறித்த கலந்துரையாடலில்இ இலங்கை மற்றும் ரோமானியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரதமர் தூதுவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தூதுவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Advertisement

எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அர்ப்பணிப்புடன்  உள்ளது என பிரதமர் இதன் போது உறுதிப்படுத்தினார்.

இந் நிகழ்வில் பிரதம செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக பிரதம செயலாளர் சாகரிக்கா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இயக்குனர் ஜெனரல் ஷோபிணி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன