Connect with us

பொழுதுபோக்கு

19 வயதில் முதல் பட ஆடிஷன்; ராஷ்மிகா எப்படி இருக்காருனு பாருங்க

Published

on

Rashmika Manj

Loading

19 வயதில் முதல் பட ஆடிஷன்; ராஷ்மிகா எப்படி இருக்காருனு பாருங்க

தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா ஹீரோயினாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. முன்னணி நடிகர்களுடனும் ராஷ்மிகா இணைந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய், தெலுங்கில் அல்லு அர்ஜுன், தேவர்கொண்டா, இந்தியில் ரன்வீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.தமிழில் தற்போது தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த ராஷ்மிகா மாடலிங் துறையில் நுழைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா.முன்னதாக, தனது 19 வயதில் கோபிலோலா எனும் கன்னட படத்திற்கு ராஷ்மிகா முதல் முதலில் ஆடிஷன் செய்துள்ளார். அப்போது அதில், நடித்தும், நடனம் ஆடியும் தனது திறமையை வெளிபடுத்தி உள்ளார். எனினும், ராஷ்மிகாவுக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரின் இந்த முதல் பட ஆஷடின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #RashmikaMandanna first audition video at the age of 19 🫡pic.twitter.com/oU1cLZ3XqK

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன