நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 25/12/2024 | Edited on 25/12/2024

சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கியது. அதை தொடர்ந்து ஜூலையில் சூர்யாவின் பிறந்தநாளன்று(23.07.2024 படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற போது, சூர்யாவுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு அவர் குணமாகி கொச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவருகிறார்.

Advertisement

இந்த நிலையில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா பேசும் வசனம், படத்தில் ரவுடி, அடிதடி, ஆடாவடி என கலவரக்காரராகவே இருந்துவிட்டு பூஜா ஹெக்டேவின் மீதுள்ள காதலின் காரணமாக அனைத்தையும் விட்டுவிடுகிறேன் என்று கூறுவது போல் காட்சிய அமைக்கப்பட்டுள்ளது. முடிவில் படத்தின் பெயர் ரெட்ரோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.