Connect with us

இந்தியா

டாப் 10 நியூஸ்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் என்.டி.ஏ கூட்டணி ஆலோசனை வரை!

Published

on

Loading

டாப் 10 நியூஸ்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் என்.டி.ஏ கூட்டணி ஆலோசனை வரை!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று (டிசம்பர் 25) நடைபெறுகிறது.

இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

ஒடிசா மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மிசோரம் மாநில ஆளுநராக விஜய்குமார் சிங், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத், பிகார் ஆளுநராக ஆரிஃப் முகமது கான், மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா ஆகியோரை புதிய ஆளுநர்களாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இன்று முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.

Advertisement

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 43 பைசாக்கள் உயர்ந்து ரூ.101.23-க்கும், டீசல் விலை 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துவரும் படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.

Advertisement

ஆங்கிலேயர்களுடன் போர் புரிந்து ராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானங்களை மீட்டெடுத்த வேலுநாச்சியாரின் 228-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன