Connect with us

இந்தியா

புதுச்சேரி கடற்கரை அருகே பணை மரங்களுக்கு தீ வைத்த நபர்கள்; போலீஸ் வலைவீச்சு

Published

on

fire

Loading

புதுச்சேரி கடற்கரை அருகே பணை மரங்களுக்கு தீ வைத்த நபர்கள்; போலீஸ் வலைவீச்சு

புதுக்குப்பம் கிராமத்தில்‌ கடற்கரை அருகே இருந்த பத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களை தீயிட்டு கொளுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பம் அழகிய கடற்கரையை பெற்றுள்ள மீனவ கிராமத்தில் நமது தமிழரின் பாரம்பரிய பண்பாடு கலாச்சாரம் நிறைந்த பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும்.அண்மையில், தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக புதுச்சேரி கவர்னர்களை வைத்து பல்லாயிரக்கணக்கான பனை விதைகள் பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் அறக்கட்டளையினர் நட்டுள்ளனர்.  மேலும் தற்போது புதுக்குப்பம் கடற்கரை ஓரங்கள் பனை மரங்களாக வளர்ந்து, புயல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்ற இயற்கையை பாதுகாத்து வருகிறது. அண்மையில் வந்த பென்ஜால்  புயலினால் பனை மரங்கள் அதிகம் இருந்ததினால் புதுகுப்பம் கிராமம் பெரிய அளவில் பாதிப்படையவில்லை.பனை மரங்கள் புயலின் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடியது நிலத்தடி நீரை சேமித்து குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது. மேலும் பனை நொங்கு பனங்கிழங்கு பனம்பழம் போன்றவையும் மக்களுக்கு மிகப்பெரிய உணவாக அமைந்துள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த பனை மரங்களுக்கு யாரோ சில சமூக விரோதிகள் நேற்று இரவு தீயிட்டு கொளித்தி உள்ளார்கள். இதற்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன