Connect with us

சினிமா

8 வருட தவம்…65 ஊசிகள்!! 3 மாதத்தில் கருச்சிதைவு!! கண்ணீருடன் அழுத நடிகை..

Published

on

Loading

8 வருட தவம்…65 ஊசிகள்!! 3 மாதத்தில் கருச்சிதைவு!! கண்ணீருடன் அழுத நடிகை..

குழந்தை வரம் வேண்டி எட்டு ஆண்டுகளாக தவமாய் தவம் இருந்த பிரபல நடிகை ஒருவர், சமீபத்தில் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறி கதறி அழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை 44 வயது மாடல் அழகியான சம்பவ்னா சேத் தான்.பிக்பாஸ் 2, ராஸ் பிச்லே ஜனம் கா, தில் ஜீதேகி தேசி கேர்ள், பயம் காரணி, கத்ரோன் கே கிலாடி 4 போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானார். கடந்த 2016ல் தன்னைவிட 10 வயது சிறியவரான அவினாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.சம்வனா சேத் மற்றும் அவரது கணவர் அவினாஷ் திவேதி இருவரும் யூடியூப் சேனல் நடத்தி வரும் நிலையில், கர்ப்பமாக இருக்கும் செய்தியை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டு, பலமுறை நாங்கள் IVF மூலமாக குழந்தையை பெற்றெடுக்க முயற்சி செய்தோம். ஆனால் அவை அனைத்தும் தோல்வி அடைந்தது.ஆனால் இந்தமுறை அது சாத்தியமாகிவிட்டதாகவும் மூன்று மாதத்திற்கான குழந்தை வளர்ச்சி இருப்பதாகவும் இதயத்துடிப்பு வர ஆரம்பித்ததாகவும் மருத்துவர் கூறியிருந்தார். அண்மையில் ஸ்கேன் செய்தபோது இதயத்துடிப்பு இல்லை என்று கூறியதால் எங்களால் முடியாமல் கருவை கலைத்துவிட்டோம்.தாயாவதைவிட ஒரு பெண்ணுக்கு சந்தோஷம் வேறேதும் இருக்க முடியாது, ஒருசில தம்பதியினர் ஒவ்வொரு நாளும் இதற்காக வருடக் கணக்கில் காத்திருக்கிறார்கள். அதைப்போலத்தான் நானும் தாயாக வேண்டும் என்று 8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்.குழந்தை வேண்டும் என்பதற்காக நான் அனுபவித்த வலிகள் பல, 65 ஊசிகள் போட்டு 44 வயதில் தாயானதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேன். அடுத்தாண்டு என் கையில் குழந்தை இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடவுள் என் கனவை கலைத்துவிட்டார் என்று சம்பவ்னா சேத் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன