இலங்கை
அம்பாறையில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி’!

அம்பாறையில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி’!
அம்பாறை நகரின் தொழிற்பேட்டையில் உள்ள மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியின் செப்பு கம்பியை அறுக்கச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (26) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மின்கம்பத்தில் சிக்கிய தாமிர கம்பியை அறுக்க சென்ற நபரை, போலீசார் நகரில் மின்சாரத்தை துண்டித்து உடலை கீழே இறக்கினர்.
அம்பாறை நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.