Connect with us

சினிமா

அருண் சார்பில் பிக்பாஸில் நுழையும் அர்ச்சனா? தரமான சம்பவம் லோடிங்

Published

on

Loading

அருண் சார்பில் பிக்பாஸில் நுழையும் அர்ச்சனா? தரமான சம்பவம் லோடிங்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து இறுதியில் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றவர் தான் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித் திரையிலும் கால் பதித்துள்ளார்.ராஜா ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அர்ச்சனா ரவிச்சந்திரன். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.அதன்படி பிக்பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய அர்ச்சனா ஆரம்பத்தில் அழுது புலம்பி தான் வீட்டுக்கு போக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் போட்டாலும், இறுதியில் ஒரு ஸ்ட்ராங் ஆன பெண்ணாக தனித்து நின்று போராடினார். இவருடைய நேர்மையை பார்த்து பலரும் அர்ச்சனாவை டைட்டில் வின் பண்ண வைத்தார்கள்.d_i_aபிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டிங் காலனி 2ல் முக்கிய கேரக்டரில் அர்ச்சனா நடித்திருப்பார். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் அர்ச்சனா விளம்பரங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.இன்னொரு பக்கம் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்ட அருணை அர்ச்சனா காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படியே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அருன் தெரிவித்த விடயம் என்பன படு வைரலாகி இருந்தது.இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் எட்டில் இந்த வாரம் போட்டியாளர்களை குடும்பத்தார் சந்தித்து வரும் நிலையில் அருண் சார்பில் அர்ச்சனா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அதன்படி அருணுக்கு நண்பியாகவோ அல்லது காதலியாகவோ அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும். அருணுக்கு ஒரு எனர்ஜி பூஸ்ட் ஆக அவர் செயல்பட வேண்டும் என ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன