இலங்கை
இலங்கைக்கு வந்த 20 இலட்சம் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்த 20 இலட்சம் சுற்றுலா பயணிகள்
2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று(26) 20 இலட்சத்தை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிசம்பர் மாதத்தின் முதல் 22 நாட்களில் 161,383 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 35,131 ஆகும்.