Connect with us

இலங்கை

குறைந்த விலைக்கு கொண்டுவரவுள்ள ஜப்பானிய ஹைபிரிட் வாகனங்கள்!

Published

on

Loading

குறைந்த விலைக்கு கொண்டுவரவுள்ள ஜப்பானிய ஹைபிரிட் வாகனங்கள்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை நிதியமைச்சு எதிர்வரும் காலங்களில் வெளியிடும் எனவும் 

Advertisement

தனியார் வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, வாகன இறக்குமதியாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் 

சந்தை தேவையை பூர்த்தி செய்ய ஜப்பானில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை பழமையான ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறும்  இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை அண்மையில் கூடிய அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.

Advertisement

வாகன இறக்குமதியாளர்களுடன் கலந்தாலோசித்து நிதி அமைச்சினால் முறையான முன்மொழிவு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே இவ்வாறான முன்மொழிவுகளை பரிசீலிக்க முடியும் எனவும் 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது பரந்த அளவிலான விவாதத்தைத் தூண்டியுள்ளதுடன் வாகனங்களின் மலிவு மற்றும் புதிய வரியின் தாக்கங்கள் கலந்துரையாடலில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன