இந்தியா
கேரளாவில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்த 60 வயது நபர் கொலை

கேரளாவில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்த 60 வயது நபர் கொலை
திருவனந்தபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்ததற்காக 60 வயது முதியவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
ஷாஜஹான் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், போதைப்பொருள் பாவனையை அதிகாரிகளிடம் புகாரளித்ததற்காக ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்த ஷாஜகான் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.