சினிமா
நடு ரோட்டில் எடுத்த வீடியோ, ஒரே நாளில் இந்தியாவின் க்ரஸ் ஆன நடிகை
நடு ரோட்டில் எடுத்த வீடியோ, ஒரே நாளில் இந்தியாவின் க்ரஸ் ஆன நடிகை
வாமிகாதமிழ் சினிமாவில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வாமிகா. இவர் இதை தொடர்ந்து மலையாளத்தில் கோதா படத்தில் நடித்தார்.அதன் பின்பு நிறைய வெப் சீரியஸில் தான் இவரை பார்க்க முடிந்தது, இந்நிலையில் வாமிகா நீண்ட வருடம் கழித்து தியாகராஜா குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை என்ற ஆந்தாலஜி ஒன்றில் நடித்தார்.தற்போது இவர் ஹிந்தியில் வருன் தவான் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி படத்தின் ரீமேக் ஆன பேபி ஜான் படத்தில் எமி ஜாக்ஸன் ரோலில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கிளம்பிய போது, இவர் தன் காரில் ஏறும் நேரத்தில் புகைப்பட கலைஞர்கள் இவரை சூழ்ந்தனர்.அப்போது இவர் கொடுத்த ரியாக்ஸன் ஒரே நாளில் இந்தியாவிற்கு க்ரஸ் ஆகிவிடும் அளவிற்கு வைரல் ஆகியுள்ளது, இதோ அந்த வீடியோ..