Connect with us

பொழுதுபோக்கு

பீடி, தீப்பெட்டியுடன் மேடை ஏறிய எம்.ஆர்.ராதா: இதைவிட சிறப்பா யாரும் பாராட்டவே முடியாதுப்பா!

Published

on

MR Radha Withs

Loading

பீடி, தீப்பெட்டியுடன் மேடை ஏறிய எம்.ஆர்.ராதா: இதைவிட சிறப்பா யாரும் பாராட்டவே முடியாதுப்பா!

தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனையுடன் பல கருத்துக்களை கூறி நடித்து வந்த நடிகர் எம்.ஆர்.ராதா, தனது நடிப்பின் மூலம் இன்றும் நிலைத்திருக்கும் நிலையில், ஒரு இயக்குனரின் நாடகத்திற்காக சென்று, அங்கு பீடி, தீப்பெட்டியுடன் மேடையில் ஏறி பேசியுள்ளார். ஏன் தெரியுமா?தமிழ் சினிமாவில் இயக்குனர் திலகம் என்று போற்றப்படுபவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் சினிமாவில் இயக்குனராக ஆவதற்கு முன்பு நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். அந்த வகையில, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய எழுத்தாளன் என்ற நாடகத்தை தனது சக்தி நாடக சபா மூலமாக நடத்துவதற்காக, என்.ஏ.நடராஜன் என்பவர் அனுமதி பெறுவதற்காக சந்தித்துள்ளார்.அவர் அனுமதி கேட்டவுடன் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நாடகம் நடைபெறும் அரங்கத்திலும் தனது பங்களிப்பை கொடுத்து வந்துள்ளார். இந்த நாடகம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஒருநாள் யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் எம்.ஆர்.ராதா இந்த நாடகத்தை பார்க்க வந்துள்ளார். இவர் வந்ததை தெரிந்துகொண்ட என்.ஏ.நடராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும், மகிழுந்த மகிழ்ச்சியில் இருந்தது.மேலும் நாடகம் முடிந்தவுடன் அவரை அழைத்து நாடகத்தை பற்றி பேச சொல்வோமா? நாம் கேட்டுக்கொண்டால் அவர் பேசுவாரா என்று இருவருமே யோசித்துக்கொண்டிருந்தபோது, நாடகம் முடிந்தவுடன் பேசுவதற்காக அனுமதி கேட்டு எம்.ஆர்.ராதாவே ஒருவரை அனுப்பியுள்ளார். இந்த நபர் வந்து எம்.ஆர்.ராதா பேச ஆசைப்படுகிறார் என்று சொன்னதும், இவர்கள் இருவரும் மேலும் மகிழ்ச்சியடைந்தனர்.நாடகம் முடிந்தபின் பேசுவதற்காக மேடை ஏறிய எம்.ஆர்.ராதா ஒரு கையில் பீடி ஒரு கையில் தீப்பெட்டியுடன் பேச தொடங்கியுள்ளார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் பேச தொடங்கிய எம்.ஆர்.ராதா, இந்த நாடகத்தை தொடங்கும்போது பீடி பிடிக்கலாம் என்று எடுத்தேன். ஆனால் நாடகம் விறுவிறுப்பாக சென்றதால், கடைசிவரை இந்த பீடியை என்னால் பிடிக்க முடியவில்லை. இதைவிட இந்த நாடகத்தை பற்றி நான் என்ன சொல்லிவிட முடியும் என்று பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.நாடகம் முடிந்த ஒரு சில நாட்கள் கழித்து, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை தேடி என்.எஸ்.கிருஷ்ணன் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இப்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வீட்டில் இல்லாததால் அவர் வந்தவுடன் எனக்கு போன் செய்ய சொல் என்று தனது விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்கு சொல்ல, உன் எழுத்தாளன் நாடகம் சிறப்பாக இருந்தது என்று எம்.ஆர்.ராதா உன்னை பற்றிதான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தான்.அவன் எல்லோரையும் திட்டுவான் அதிகம் பாராட்டமாட்டான். ஆனால் உன்னை பாராட்டி இருக்கிறான். அதனால் தான் அந்த எழுத்தாளன் நாடகத்தை என் வாயால் பாடிக்க சொல்லி கேட்கலாம் என்று வர சொன்னேன் என்று சொல்ல, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அதன்பிறகு சினிமாவில் இயக்குனராக மாறிய அவர், இயக்குனர் திலகம் என்று அழைக்கப்பட்ட நிலையில், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன