இலங்கை
54 பட்டதாரிகளுக்கு நியமனம்

54 பட்டதாரிகளுக்கு நியமனம்
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மாகாணப்பாடசாலைகளில் கடமைபுரிவதற்காக 54 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகரவினால் இன்று வியாழக்கிழமை (26) வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.சரத் ரத்நாயக்க, கல்வி அமைச்சு செயலாளர் கே.குணநாதன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.