Connect with us

விளையாட்டு

இளம் வீரருடன் மோதல்: கோமாளி கோலி… ஆஸ்திரேலிய பத்திரிகை விமர்சனம்!

Published

on

Loading

இளம் வீரருடன் மோதல்: கோமாளி கோலி… ஆஸ்திரேலிய பத்திரிகை விமர்சனம்!

ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாசுடன் தோளுக்கு தோள் மோதிய விராட் கோலியை கோமாளி கோலி என்று ஆஸ்திரேலிய பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 19 வயதே நிரம்பிய அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Advertisement

அதிரடியில் மிரட்டிய சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஓவரில் சிக்ஸர் அடித்தார். பும்ராவின் 4,483 பந்துகளுக்கு பிறகு அவரது பந்து சிக்சருக்கு பறந்துள்ளது.

அறிமுக டெஸ்டில் அரைசதம் விளாசி மிரட்டினார். 65 பந்துகளை எதிர்கொண்ட சாம் கொன்ஸ்டாஸ் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களுடன் எடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தின் போது, இந்திய பேட்ஸ்டேன் விராட் கோலி சாம் கொன்ஸ்டாஸுடன் வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

Advertisement

சாம் கொன்ஸ்டாஸின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் கோலி நடந்து கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் வேண்டுமென்றே கோலி இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விராட் கோலியின் செயலை ஆஸ்திரேலிய மீடியாக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

Advertisement

ஒரு ஆறிமுக வீரரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளன.

அதோடு, விராட் கோலியை கோமாளி கோலி என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா என்ற பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது. விராட் கோலி ஒரு கோழை என்றும் அந்த பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன