பொழுதுபோக்கு
என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள்: புலம்பிய நடிகை; இன்ஸ்டாவில் எமோஷ்னல் பதிவு!

என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள்: புலம்பிய நடிகை; இன்ஸ்டாவில் எமோஷ்னல் பதிவு!
சமீபத்தில் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியல், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய நிலையில், இந்த சீரியலில் ஒருசிலர் வெளியேறி அவர்களுக்கு பதிலாக புதிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த சீரியலில் இருந்து தன்னை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாக ஒரு நடிகை கூறியுள்ளார்.சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் எதிர்நீச்சல். இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் நடிதது வந்த பிரபல நடிகர் மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் மீண்டும் தொடர்கிறது என்று ப்ரமோ வெளியான நிலையில், ஜனனி கேரக்டரில் நடித்த நடிகை மதுமிதா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்துள்ளார். ஆதிரையாக நடித்த நடிகை சத்யா, தற்போது விஜய் டிவியின் தனம் சீரியலில் நடித்து வருகிறார். இதனால் அவர் 2-வது சீசனில் நடிக்கமாட்டார் என்று தகவல் வெளியானது.A post shared by Thara Ansari @ official (@thara_ansari)அதேபோல் குழந்தை தாராவாக நடித்து வந்த ஃபர்சானாவும் சீரியலில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக பிரஜானா நடிக்க உள்ளதாகவும், தகவல் வெளியான நிலையில், இயக்குனர் திருச்செல்வம் தனனை வேண்டுமென்றே எதிர்நீச்சல் சீரியலில் இருந்து நீக்கிவிட்டார் என்றும், நான் எவ்வளவோ அழுதும் அவர் இறங்கிவரலில்லை. என்னை நீக்கிவிட்டார் என்று தாரா பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.