இலங்கை
பேருந்தின் முன்சில்லு கழன்று விபத்து யாழில் சம்பவம்

பேருந்தின் முன்சில்லு கழன்று விபத்து யாழில் சம்பவம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால்இ அருகில் சென்ற பட்டாரக வாகனம் விபத்துக்குள்ளான சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி வௌ்ளிக்கிழமை (27) காலை சென்ற பேருந்தே இவ்வாறு இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.
பக்க சில்லின் அச்சு உடைந்து சில்லு தீப்பிடித்து சென்றதில் அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது பேருந்தின் சில்லு மோத பட்டா சாரதி நிலைகுலைந்து பட்டாவும் விபத்துக்குள்ளாகியது.
பேருந்தின் சாரதியின் சாமர்த்தியத்தால் பேருந்து குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.