Connect with us

இந்தியா

மன்மோகன் சிங் இறுதி கிரியை நாளை

Published

on

Loading

மன்மோகன் சிங் இறுதி கிரியை நாளை

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில  திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வயது மூப்பு உடல்நல குறைவு மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி  நேற்று இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தார்.

Advertisement

இதையடுத்து மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை (28) தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இன்று (27)  நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும்இ 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன