Connect with us

உலகம்

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; அமெரிக்கா வெள்ளை மாளிகை இரங்கல்!

Published

on

Loading

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; அமெரிக்கா வெள்ளை மாளிகை இரங்கல்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 27/12/2024 | Edited on 27/12/2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்கா வெள்ளை மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளதாவது, “டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்க-இந்தியா இடையேயான நட்புறவில் மிகச் சிறந்த சாதனையாளராக இருந்தார். இரு நாடுகள் இணைந்து சாதித்ததற்கு அவரது பணி அடித்தளமாக அமைந்தது. அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுப்பதில் அவரின் தலைமை, அமெரிக்க-இந்திய உறவின் சாத்தியக்கூறுகளில் ஒரு பெரிய முதலீட்டைக் குறிக்கிறது. 

Advertisement

இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிய அவரது பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். அமெரிக்காவையும், இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான அவரது அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார். 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; அமெரிக்கா வெள்ளை மாளிகை இரங்கல்!

  • “நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” – எடப்பாடி பழனிசாமி இரங்கல்

  • அஜர்பைஜான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ரஷ்யா?; உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

  • காரில் கிடந்த சிறுவனின் உடல்; பள்ளி விடுமுறைக்காக நிகழ்ந்த கொடூரச் சம்பவம்!

  • “எனது வழிகாட்டியை இழந்துவிட்டேன்” – ராகுல் காந்தி உருக்கம்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன