இலங்கை
மோசடியில் ஈடுபட்ட விமானப்படை சிப்பாய் கைது

மோசடியில் ஈடுபட்ட விமானப்படை சிப்பாய் கைது
பேருந்து ஒன்று விற்பனைக்கு இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டு ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஹந்தபான்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய விமானப்படை சிப்பாய் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான விமானப்படை சிப்பாய் பேருந்து ஒன்று விற்பனைக்கு இருப்பதாக கூறி சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ள நிலையில் குருணாகல் – மெல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்று பஸ்ஸை வழங்காமல் மோசடி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான விமானப்படை சிப்பாயைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.