இந்தியா
கிச்சன் கீர்த்தனா : கொள்ளுப்பொடி

கிச்சன் கீர்த்தனா : கொள்ளுப்பொடி
உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி இந்தக் கொள்ளுப்பொடிக்கு உண்டு. சாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சூப்பர் காம்பினேஷனாக அமையும்.
கொள்ளு – கால் கிலோ
பூண்டுச் சாறு – 100 மில்லி
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 10 கிராம்
காய்ந்த கறிவேப்பிலை – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
கொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.