இந்தியா
புத்தாண்டு கொண்டாட்டம் : காவல்துறை எச்சரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டம் : காவல்துறை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேஸ் நடத்தினாலோ தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர்.அருண், தலைமையில் இன்று (டிசம்பர் 28) புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பகாவும் புத்தாண்டு கொண்டாட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, 31.12.2024 அன்று இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கலனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும்,
முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல். அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்கணிக்க, கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை.
கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற் பகுதிகளில் காவல் அதிகாரிகள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Tarnain Vehide) வனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகணங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும்,
மணல் பகுதியிலும் தற்காலிக உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தவும். சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்கணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அவசர மருத்துவ உதவிக்கு. முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருத்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
2025 பொங்கல் பரிசு தொகுப்பு… மீண்டும் பணப்பரிசு மிஸ்ஸிங் – பொதுமக்கள் ஏமாற்றம்!
கல்லூரி மாணவர் முதல் இறுதி நிமிடம் வரை : மன்மோகன் சிங்கின் போட்டோ கேலரி!