Connect with us

சினிமா

விஜய் முதல் அல்லு அர்ஜுன் வரை!! பணக்கார பெண்ணை கல்யாணம் செய்த சவுத் நடிகர்கள்..

Published

on

Loading

விஜய் முதல் அல்லு அர்ஜுன் வரை!! பணக்கார பெண்ணை கல்யாணம் செய்த சவுத் நடிகர்கள்..

சினிமா நடிகர்கள் திரையுலகை சார்ந்திராத பெண்களை திருமணம் செய்வதுண்டு. அதிலும் முகப்பெரிய பணக்காரப் பெண்களை செய்வார்கள். அப்படி யார் யார் பணக்காரப் பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்…தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராம் சரண், 2012ல் உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து க்ளின் கிளாரா என்ற மகளை பெற்றெடுத்தார். ராம் சரணின் மனைவி உபாசனா, ஒரு தொழிலதிபர். அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவராகவும் அப்பல்லோ நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியுமாவார். அவரது தந்தை அனிக் காமினேனி KEI குழுமத்தின் நிறுவனராவார். உபாசனா காமினேனியின் சொத்து 2500 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.ஜூனியர் என் டி ஆரின் மனைவி லக்ஷ்மி பிரணதி, சினிமா வட்டாரத்தில் இருந்து சற்று தள்ளி இருந்து வருபவர். என் டி ஆர் என்னதான் பெரிய வீட்டு மகன் என்றாலும் அவரது மனைவி பிரபல தொழிலதிபர் நர்னே ஸ்ரீனிவாஸ் ராவின் மகள். அவரது தயார் பிரபல அரசியல்வாதி சந்திரபாபு நாயுடுவின் மருமகள். லக்ஷ்மி பிரணதியின் குடும்பம் ஆந்திராவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று.மலையாள நடிகர் துல்கர் சல்மானின் மனைவி அமல் சுஃபியா, தொழிலதிபராகவும் இண்டிரியர் டிசைனராகவும் திகழ்கிறார். அமல் சுஃபியா, சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சையத் நிஜாமுதீனின் மகளாவார்.தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மிஹீகா பஜாஜ் என்பவரை 2020ல் திருமணம் செய்தார். மிஹீகா பஜாஜ், செல்வாக்கு மிக்க வணிகக்குடும்பத்தை சேர்ந்தவர். மிகவும் பிரபலமான ஆடை நகை பிராண்டான க்ர்சலா ஜூவல்ஸின் உரிமையாளரின் மகள் தான் மஹீகா. ஒரு தொழிலதிபராகவும் டியூ டிராப் டிசைனர் ஸ்டுடியோவின் நிறுவனராகவும் மஹீகா திகழ்ந்து வருகிறார்.நடிகரும் அரசியல் தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஒரு வணிகக்குடும்பத்தை சார்ந்தவர். இலங்கை தொழில் அதிபர் மகளான சங்கீதா இங்கிலாந்தில் வளர்ந்து தற்போது தந்தையின் தொழிலையும் பார்த்து வருகிறார்.தெலுங்கு சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி கணவருக்கு சமமான செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர். புகழ்பெற்ற சயிண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவரும் கல்வியாளருமான கஞ்சர்லா சந்திரசேகர் ரெட்டியின் மகள் தான் சினேகா ரெட்டி.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன