Connect with us

இந்தியா

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து: மன்னிப்பு கோரிய புதின்

Published

on

Putin apologizes

Loading

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து: மன்னிப்பு கோரிய புதின்

கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ரஷ்யாவின் க்ரோஸ்னியில் விமானம் தரையிறங்க முயன்றபோது ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள், உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Putin apologises for downing Azerbaijan Airlines plane, says Russia was repelling Ukrainian drone attacks “அஜர்பைஜான் பயணிகள் விமானம், அதன் அட்டவணையின்படி பயணித்து, க்ரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அந்த நேரத்தில், க்ரான்ஸி, மாஸ்கோட் மற்றும் விளாடிகவ்காஸ் ஆகியவை மீது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனை தடுக்க ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர் தாக்குதல் நடத்தின” என்று கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எம்ப்ரேயர் (EMBR3.SA) பயணிகள் விமானம், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து கிறிஸ்துமஸ் தினத்தன்று, ரஷ்யாவின் தெற்கு செச்சினியா பிராந்தியத்தில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்றது. கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகருக்கு அருகே காஸ்பியன் கடலின் குறுக்கே நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்த விமானம் பயணித்தது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது ஒரு துக்கரமான நிகழ்வு என கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”விளாடிமிர் புதின் ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கேட்டுக் கொண்டார்” என்று கிரெம்ளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.உக்ரைன் மற்றும் அமெரிக்கா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், முதன்முறையாக கிரெம்ளின் இது குறித்து பதிலளித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்ய படையினரால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான “ஆரம்ப அறிகுறிகளை” அமெரிக்கா கண்டதாகக் கூறினார். ஆனால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.இந்த விபத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என உக்ரைன் செய்தி தொடர்பாளர் அண்ட்ரெ யெர்மாக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன