சினிமா
அடுத்தடுத்து வெளியாகவுள்ள தனுஷின் படைப்புகள்.! வெளியான அதகள அப்டேட்

அடுத்தடுத்து வெளியாகவுள்ள தனுஷின் படைப்புகள்.! வெளியான அதகள அப்டேட்
கோலிவுட்டில் நடிகராக மட்டுமே இல்லாமல் இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடல் ஆசிரியராகவும் பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகின்றார் தனுஷ். இவருடைய நடிப்பில் இறுதியாக ராயன் திரைப்படம் வெளியானது.இதைத் தொடர்ந்து இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படங்களை இயங்கி வருகின்றார். மேலும் தனுஷின் கைவசம் குபேரா, இளையராஜாவின் பயோபிக் போன்ற படங்களும் உள்ளன.d_i_aஇந்த நிலையில், தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தில் ஒரு சண்டை காட்சி, ஒரு சோங் மட்டுமே இழுபறி நிலையில் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் தனுஷுடன் நித்யா மேனன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகின்றது.மேலும் இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களும் இரண்டு மாத இடைவெளியில் ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும் இந்த படங்களுக்கான போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.