Connect with us

இந்தியா

அதிமுகவை பாராட்டும் அண்ணாமலை… டெல்லி விசிட் தந்த மாற்றமா?

Published

on

Loading

அதிமுகவை பாராட்டும் அண்ணாமலை… டெல்லி விசிட் தந்த மாற்றமா?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று (டிசம்பர் 29) நடத்திய நூதன போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்த போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதற்கிடையே மாணவி அளித்த புகாரில், வன்கொடுமை சம்பவத்தின் போது ஞான சேகரன் ’சார்’ ’சார்’ என போனில் ஒருவருடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ’யார் அந்த சார்’ என கேள்விக்கேட்டு அதிமுக, பாஜக தலைவர்கள் தொடர்ந்து அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் ஏராளமானவா்கள் இன்று திடீரென குவிந்தனா். அவர்கள் மாலின் உள்ளே நுழைந்து, கைகளில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினா். அவர்களது கைகளில் வைத்த பதாகைகளில் யார் அந்த சார்? என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

Advertisement

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனைக் கண்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவினரின் இந்த நூதன போராட்டத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

அதில், “ஒரு சாமானியனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் தலையிடாமல் அரசியலில் ஒருபோதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு அதிமுகவினருக்கு பாராட்டுகள்” என கூறி உள்ளார்.

Advertisement

எதிர்க்கட்சிகளான அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைப்பதில் மோதல் போக்கு நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலையும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கடுமையாக எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற பாஜக அமைப்பு தேர்தல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில் அதிமுகவினரின் போராட்டத்தை அண்ணாமலை பாராட்டியுள்ளது அரசியல் களத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன