இலங்கை
அர்ச்சுனா நிஜத்தில் அவர் செய்து காட்டவேண்டும்!

அர்ச்சுனா நிஜத்தில் அவர் செய்து காட்டவேண்டும்!
ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தனித்து செயற்பட முற்படுமானால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து தமிழ் தேசியக் கட்சி தனித்து களமிறங்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (28) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் ஏனைய கட்சிகள் மக்கள் செல்வாக்கு அற்று போவதால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தாம் தனித்து செயற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன என ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் இன்று (29) வவுனியா மாவட்டத்தில் கூட இருந்த நிலையில் ரெலோ இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன்குருசாமியின் மனைவியின் தாயார் இறந்தமையினால் குறித்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ரெலோ மற்றும் புளொட் இயக்கம் தனித்து செயற்பட முனையுமானால் தமிழ் தேசியக் கட்சியாக தனித்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற இருக்கின்ற அனைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தல் களத்தில் நிற்போம்.
இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று தமிழ் தேசிய கட்சியின் நிர்வாகக்குழு கலந்துரையாடவுள்ளோம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்ற பொழுது அவர்கள் தனித்து செயற்படவுள்ளார்களா அல்லது இந்த விடயம் உண்மையா என்பது தொடர்பில் உண்மை தன்மையை அறிய முடியும்.
மேலும் அர்ச்சுனா எம்பி யூடிடயூப்பில் ஹீரோவாக இருக்கலாம் நிஜத்தில் ஹீரோவாக இருந்தால் செய்து காட்டலாம்.
தேசிய மக்கள் சக்தி அர்ச்சுனா போன்ற பலரை திரைமறைவில் பாவித்து வருகின்றது. பலருக்கு பின்னாலே தேசிய மக்கள் சக்தி நின்றது.
பல அமைப்புகள் ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தி ஊடுருவிய இருந்தார்கள். பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு செல்லும் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும்.
ஆகவே அர்ச்சுனா ஹீரோவாக இருப்பது யூடியூப்பில் தான் ஆனால் நிஜத்தில் அவர் செய்து காட்டவேண்டும் அவ்வாறு செய்து காட்டினால் அவரை நாம் வாழ்த்துவோம் என தெரிவித்தார்.