Connect with us

இந்தியா

கிச்சன் கீர்த்தனா: குளிர்கால ஸ்பெஷல்… இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Published

on

Loading

கிச்சன் கீர்த்தனா: குளிர்கால ஸ்பெஷல்… இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

கிச்சடி, பொங்கல் போன்றவை, குளிர்காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருட்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும் தன்மையும் கொண்டது.

சுக்கு – மல்லி காபி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது.

Advertisement

சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும். உணவில் இஞ்சி, கொத்துமல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

குளிர்காலத்தில் சிலருக்கு உடல்வலி அதிகமாகும். அப்படிப்பட்டவர்கள் சிறிது பெருஞ்சீரகம், மிளகு, ஓமம், சீரகம் ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். வலி குறையும்.

மூட்டுவலி இருப்பவர்கள் டீயில் இஞ்சியைத் தட்டிப்போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சமையலில் நிறைய இஞ்சி சேர்க்கலாம். இதனால்  மூட்டுவலி நீங்கும்.

Advertisement

பனிக் காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவேண்டும். இதனால் கபத்தின் குணம் குறையும்.

அரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி, பார்லி போன்ற தானியங்களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். ஓட்ஸை விட பார்லி மிகவும் நல்லது.

பேக்கரி உணவுகளான கேக், பஃப்ஸ், பன் போன்றவை மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, கொட்டைப் பருப்பு வகைகள் (நட்ஸ்), உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

Advertisement

முளைகட்டிய பயறு சுண்டல், பாசிப்பருப்பில் செய்த லட்டு, வேர்க்கடலை உருண்டை, எள்ளு உருண்டை போன்றவை சிறந்த ஸ்நாக்ஸாக பனிக் காலத்தில் அமையும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன