இலங்கை
டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு -மேலும் 18பேர் அனுமதி!
டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு -மேலும் 18பேர் அனுமதி!
தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், 18 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இடம்பெற்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் திங்கள், செவ்வாய் விசேட டெங்கொழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (ப)