Connect with us

இலங்கை

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே!

Published

on

Loading

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே!

தமிழ் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதாதையை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள், மற்றும் தொண்டர்கள் உரிமை கோரியுள்ளனர்.

Advertisement

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (28) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இப் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் குறித்த பதாதையை பார்வையிட்ட பின்னர் கூட்ட மண்டபத்திற்குள் சென்றிருந்தனர்.

குறித்த பதாகையில் நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச்சபையை உடனடியாக கூட்டு, யாப்பின் படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவிற்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச்சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக்குழுவை இயங்கவிடு, மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே என்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன