Connect with us

விளையாட்டு

8484 பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்தியர்: சாதனை படைத்த பும்ரா

Published

on

Bumra

Loading

8484 பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்தியர்: சாதனை படைத்த பும்ரா

இன்று மெல்போர்னில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டி போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா  200 டெஸ்ட் விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆங்கிலத்தில் படிக்கவும்: Jasprit Bumrah becomes fastest Indian to record 200 Test wickets in 8484 balls during Boxing Day Test முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, டெஸ்டின் 4 வது நாளில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா தனது இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றி இந்த சாதனையை எட்டியுள்ளார். தனது 44-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய பும்ரா, டிராவிஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். பட் கம்மின்ஸ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரும் 44 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்பும்ரா தனது 200-வது டெஸ்ட் விக்கெட்டை 8484-வது பந்து வீச்சில் கைப்பற்றினார். இதன் மூலம் 200 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். முன்னதாக முகமது ஷமி தனது 9896-வது பந்து வீச்சில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர விரைவாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா 4-ஆம் இடம் பெறுகிறார். வக்கார் யூனிஸ், டேல் ஸ்டெயின், ககிசொ ரபாடா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். We only believe in Jassi bhai 😎200 Test Wickets for Boom Boom Bumrah 🔥🔥He brings up this milestone with the big wicket of Travis Head.#TeamIndia #AUSvIND @Jaspritbumrah93 pic.twitter.com/QiiyaCi7BX குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:வக்கார் யூனிஸ் – 7725டேல் ஸ்டெய்ன் – 7848ககிசோ ரபாடா – 8154ஜஸ்பிரித் பும்ரா – 8484*மால்கம் மார்ஷல் – 9234பந்து வீச்சில் 19.56 என்ற சராசரியுடன் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் பும்ரா பெறுகிறார்.குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்:8484 – ஜஸ்பிரித் பும்ரா9896 – முகமது ஷமி10248 – ஆர். அஸ்வின்11066 – கபில் தேவ்11989 – ரவீந்திர ஜடேஜா

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன