சினிமா
BB8 இல் மறைக்கப்பட்ட சம்பவங்கள்..! VJS வை பார்த்து ஜெப்ரி பயப்பட இதுதான் காரணமா?

BB8 இல் மறைக்கப்பட்ட சம்பவங்கள்..! VJS வை பார்த்து ஜெப்ரி பயப்பட இதுதான் காரணமா?
பிக் பாஸ் சீசன் 8 இன்னும் மூன்று வாரங்களில் நிறைவுக்கு வரவுள்ளது. இந்த சீசனில் யார் வெற்றி வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி, பொறாமை நிலவுகின்றது. இவற்றை எபிசோட்டில் மறைத்துள்ளதாக பிக்பாஸ் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள்.அதாவது, நேற்றைய தினம் முதலாவதாக அன்ஷிதா எலிமினேட் ஆனார் என்ற செய்தி முதலில் வெளியாகி வைரலாகி இருந்தது. அதன் பின்பே ஜெப்ரி எலிமினேட் ஆனார் என்ற தகவல் வெளியானது.எனினும், நேற்றைய தினம் நடைபெற்ற பிக்பாஸ் ஷோவில் முதலாவதாக ஜெப்ரி வெளியேறி இருந்தார். இதன் போது அவர் விஜய் சேதுபதியை பார்த்து பயந்த சம்பவம் பல கேள்விகளுக்கு வித்திட்டது.அதற்கு காரணம் ஜெப்ரி எலிமினேட் ஆக முன்பு பிக்பாஸ் வீட்டில் வைத்து அவருக்கும் ஜாக்குலினுக்கும் வாக்குவாதம் இடம்பெற்று உள்ளதாம். இதன் போதே விஜய் சேதுபதி அதனை தீர்த்து வைத்து முதலில் ஜெப்ரியை வெளியேற்றி உள்ளார்.இதை தொடர்ந்தே சௌந்தர்யாவும் கேமரா முன்பு ஜெப்ரியை நினைத்து அழுது புலம்பி உள்ளார். ஆனாலும் ஜெப்ரியை நாமினேட் பண்ணியது நான் தான். அது என்னோட கேம் எனவும் சவுண்டு சொல்லி இருந்தமை குறிப்பிடத்தக்கது.