Connect with us

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?

Published

on

Loading

ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?

Boxing Day Test : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் படுதோல்வியடைந்த நிலையிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்ற ஆச்சரியமான தகவல் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டி உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.

Advertisement

இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் டிரா என தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் (4வது டெஸ்ட்) போட்டி தொடங்கியது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று 92 ஓவர்களில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் இந்திய அணி 155 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தற்போது நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால்(84) மற்றும் ரிஷப் பண்ட்(30) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா(9), கே.எல். ராகுல்(0) மற்றும் விராட் கோலி(5) உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

பாக்சிங் டே டெஸ்டில் 184 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற மெல்லிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை முடிந்த நிலையில் WTC புள்ளிப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் 66.67 PCT% புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி ஏற்கெனவே WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆஸ்திரேலியா 61.46 PCT% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 52.78 PCT% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Advertisement

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற, ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

அதில், 2-0 அல்லது 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும்.

Advertisement

மேற்கூறியபடி நடந்தால், WTC 2023-25 ​​புள்ளிப்பட்டியலானது, இந்தியா 55.26 PCT% ஆகவும், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 53.51 PCT% ஆகவும், இலங்கை அதிகபட்சமாக 53.85 PCT% ஆகவும் முடிவடையும்.

ஆனால் சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ மூன்றாவது WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ரேஸில் இருந்து வெளியேறும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன