சினிமா
இதுக்கு ஒரு எண்ட் கிடையாதா!! பாம்பை கையில் வைத்து சாகசம் காட்டிய டிடிஎஃப் வாசன்..
இதுக்கு ஒரு எண்ட் கிடையாதா!! பாம்பை கையில் வைத்து சாகசம் காட்டிய டிடிஎஃப் வாசன்..
யூடியூப்பில் பிரபலமான டிடிஎஃப் வாசன் என்றாலே தற்போது சர்ச்சைக்குரிய பிரபலமாகிவிட்டார். எது தொட்டாலும் சர்ச்சையான செயல்களில் ஈடுபட்டு போலிசாரிடம் சிக்குவார்.சமீபத்தில் அவரது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை கேன்சல் செய்திருந்தது. அதைமீறியும் பெண் தோழியுடன் பைக்கில் சென்று அதிர்ச்சி கொடுத்தார்.இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார் வாசன். அதாவது பாம்பு ஒன்றை கையில் சுத்தியபடி காரில் உட்கார்ந்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் டிடிஎஃப் வாசன்.மகாராஷ்டிராவில் உள்ள காட்டில் இருந்து கொண்டு வந்ததாகவும், பாம்பிற்கு 2 வயதாகிறது, அப்பா, அம்மா நான் தான் என்று கூறியிருக்கிறார்.இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் முறையாக லைசன்ஸ் பெற்று வளர்ப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவிவித்துள்ளாராம்.லைசன்ஸ் இருந்தாலும் பாம்பை இப்படி கையாளக்கூடாது என்று வனத்துறையினர் விளக்கம் கொடுத்துள்ளார்களாம்.
